ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 4 லட்சம் அரச ஊழியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவர்களில் இரண்டரை லட்சம் பேர் வாக்களிப்பு நிலையங்களுக்கும், ஏனையோர் பாதுகாப்பு, போக்குவரத்து, நீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேரவைகளுக்காகவும் தேர்தல் முடிவுகளை கணனி மயப்படுத்துவதற்கும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

