விருப்பமான மத்தை வழிபடுவதற்கான உரிமையை தேர்தல்கள் ஆணைக்குழு பறித்துவிட்டதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இரத்தினபுரி – மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பிக்குமார்களை அழைத்து மதவழிபாடுகளை நடத்தவும் எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது தேர்தலை மீறும் சட்டமாக உள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு கூறுகின்றது.
அரசியலமைப்பில் இந்த உரிமை இருக்கிறது. எனினும் அது தற்போது பறிக்கப்பட்டுள்ளது. பௌத்தர்கள் என்ற வகையில் இந்த நாட்டில் எவ்வாறு இப்படி வாழ முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

