மிக விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
“உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஜனவரியில் நடாத்துவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.எனினும் தற்பொழு அது பிற்போடப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தலை நடத்தாமல் பிற்போடுவது தொடர்பில் நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.