Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தலை ஒத்திவையுங்கள் -ரணில்

March 15, 2020
in News, Politics, World
0

இலங்கையின் தற்போதைய நிலைமைகளைக் கருத்தில்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர், கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளமையுடன் அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு பெரும் அச்ச சூழ்நிலைக்குள் சிக்கியுள்ள இந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் அவலப்படும் இந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு நாட்டை ஆபத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும் என்றும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயாராக உள்ளார் எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கொரானாவினால் திருமணத்திற்கு தடை

Next Post

கொரோனாவால் திங்கட்கிழமை சகல துறைகளுக்கும் விடுமுறை!

Next Post

கொரோனாவால் திங்கட்கிழமை சகல துறைகளுக்கும் விடுமுறை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures