எதிர்வரும் 16 இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, வாக்களிப்பு பணிகளுக்காக வாக்களிப்பு மத்திய நிலையங்களை தயார்படுத்துதல், குறித்த மத்திய நிலையங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல, வாக்கு எண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் பெறுபேறுகளை அறிவித்தல் என்பன குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களின் குழு இன்று இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

