ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் நாடு திரும்ப விமானப் பயணச் சீட்டுக்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாதம் 8 ஆம் திகதி முதல் அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விமானச் சீட்டுக்களை ஒதுக்கிக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கொரியா, ஜப்பான், சீனா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, இத்தாலி, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் தொழிலுக்காக சென்ற இலங்கையர்களே இவ்வாறு வருவதற்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு பதிவு செய்தவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தையும் தென் மாகாணத்தையும் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இவர்கள் இலங்கை வருவதன் காரணமாக எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை நோக்கி வரும் விமானங்களில் ஆசனங்கள் ஒதுக்குவதற்கு முடியாதுள்ளதாகவும் இன்றைய சகோதர தேசிய வார இதழொன்று அறிவித்துள்ளது.

