தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்கழு கூட்டம் நேற்றிரவு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தனியார் ஊடக வினவியது.
அதன்போது இனாதிபதியின் உரை தொடர்பிலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என வினவியதற்கு, போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை எனவும் அது தொடர்பில் கட்சி இறுதி முடிவு மேற்கொள்ளும் எனவும் அவர் பதிலளித்துள்ளார்.

