மெட்டிகஹதென்ன அக்கிரிய வீதியின் விகாரைக்கு அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றில் இருந்து 61 வயதான தேரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 15 அடி ஆழமான வாய்க்காலில் இருந்து ஏக்கிரிய மகா விகாரையை சேர்ந்த தேரர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பல மணி நேரமாக குறித்த தேரர் விகாரையில் இல்லாததன் காரணமாக அவரை தேடி சென்றபோதே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வெள்ளிக்கிழமை (22.11.2019) இரவு விபத்துக்குள்ளாகி இவ்வாறு வாய்க்காலினுள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

