ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓபிரவீந்திரநாத் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி தொகுதியில் 2019-ம் ஆண்டு நடந்த மக்களைவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்தரநாத் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து, மிலானி என்பவர் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில், `தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றிபெற்றது செல்லாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.