தேசிய சட்ட வாரம் மே 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
“சட்டத்தை மதிக்கும் சமுதாயத்திற்காக வழக்கறிஞர்கள் சமூகம்” எனும் தொனிப்பொருளில் இவ் ஆண்டுக்கான தேசிய சட்ட வாரம் அனுஷ்டிக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் மக்களின் நன்மைக் கருதி இம்முறை தேசிய சட்ட வாரம் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட 10 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது