தேசிய கணக்காய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கருஜயசூரிய கையெழுத்திட்டுள்ளார்.
இன்று காலை குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேசிய கணக்காய்வு சட்டமூலமானது கடந்த 5ஆம் திகதி வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
