தேசிய கணக்காய்வு அலுவலகம் எதிர்வரும் 5 மாத காலத்திற்குள் ஸ்தாபிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, கணக்காய்வாளர் திணைக்களம் இரத்து செய்யப்படவுள்ளது.
புதிய திருத்ததிற்கு அமைய, கணக்காய்வு நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.