தேங்காய் மற்றும் பருப்பு என்பவற்றுக்கு கட்டுப்பாட்டு விலையொன்றை அடுத்த வாரத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக வாழ்க்கைச் செலவு தீர்மானிக்கும் குழு தீர்மானித்துள்ளதாக அக்குழுவின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, பெரிய தேங்காய் ஒன்றின் விலை 70.00 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோ 125 ரூபாவுக்கும் 130 ரூபாவுக்கும் இடையிலான ஒரு விலையிலும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.