திருட்டுத் தனமாக மரத்தில் ஏறி தேய்காய் பறித்தவருக்கு பொலிஸாா் வெடி வைத்து கீழ் இறங்கச் செய்த சம்பவம் ஒன்று வாரியாபொல, மினுவன்கெவ பிரதேசத்தில் இடம்பெற்றது.
குறித்த பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில்
திருட்டுத்தனமாக தேய்காய்களை பறித்துக் கொண்டு இருப்பவா் தொடா்பில் உரிமையாளா் பொலிஸாருக்கு அறிவித்தாா்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸாரால் தென்னைமரத்தில் இருந்த சந்தேக நபரை கீழே இறங்குமாறு பணிக்கப்பட்டது. அவா் அதனை மறுத்ததையடுத்து மூன்று மணித்தியாலங்களாக போராடிய பொலிஸார், திருடனை பயமுறுத்துவதற்காக வான வேடிக்கை பட்டாசை செலுத்தியுள்ளனர்.
பின்னர் திருடன் மரத்தில் இருந்து இறங்கியதையடுத்து பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாரியாபொல பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.
42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டாா்.