மட்டக்களப்பு கரடியனாறில் சட்டவிரோதமாக தேக்குமர குற்றிகளை ஏற்றிச் சென்ற 3 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து உழவு இயந்திரமொன்றையும், ஒரு தொகுதி மரக்குற்றிகளையும் கைப்பற்றப்பட்டன.கைது செய்யப்பட்டவர்கள் கொம்மாந்துறையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்தனர்
