தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மிருகங்களுக்கு உணவு வழங்குவோருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்கினங்களுக்கு தேவையற்ற வகையில் உணவு வகைகளை வழங்கும் பார்வையாளர்களுக்கு அபராதம் விதிக்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து மிருகங்களை பராமரிப்போர் பல சந்தர்ப்பங்களில் பார்வையாளர்களை தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனினும், சில பார்வையாளர்கள் இந்த அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து பொழுது போக்கிற்காக பொலித்தீன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் மிருகங்களுக்கு உணவு வகைகளை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு உணவு வழங்குவதனால் சில வகை விலங்கினங்கள் உயிராபத்தை எதிர்நோக்க நேரிடுவதாக மிருகங்களை பராமரிப்போர் தெரிவிக்கின்றனர்.
இதனால் எதிர்வரும் காலங்களில் மிருகக்காட்சி சாலையில் மிருகங்களை பார்வையிடச் செல்லுவோர் உணவு வகைகளை அனுமதியின்றி மிருகங்களுக்கு வழங்கினால் ஒரு தொகை அபராதம் விதிக்கப்படும் என அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.