தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை போட்டிகள் நடைபெறும்.
இம்முறை போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 84 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளதுடன், இந்தியாவிலிருந்து 59 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். எனவே இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான போட்டியாகவே தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமையவுள்ளது.
இப்போட்டியின் அடுத்த கட்டம், நாளை(06) ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளன.
இரண்டு நாட்களும் தலா 14 தனிநபர் போட்டிகளும், இரண்டு அஞ்சல் ஓட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
2ஆவது தடவையாகவும் இலங்கையில் நடைபெறவுள்ள இத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.