கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது முழுமையான நேரத்தை மக்களுக்கு சேவை செய்வதில் செலவிட இருப்பதாலும் இதன்காரணமாக குறித்த தெரிவுக்குழுவில் சரியாக பங்கேற்க முடியாமல் போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே தான் குறித்த தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது விலகல் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு எழுத்துமூலம் அறிவித்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.