தென் மாகாணத்தில் பல பகுதிகளில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் நோயாளர்களை கண்காணிப்பு செய்வதற்காக சிறப்பு மருத்து குழுவொன்று அந்தப் பிரதேசங்களுக்கு நேற்றுச் சென்றுள்ளது.
தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் அனில் திசாநாயக்கவின் தலைமையில் அங்கு சென்ற குழு வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தில் பல பகுதிகளில் தற்போது பரவிவரும் வைரஸ் தொற்று தொடர்பாக ஆராய்வதற்கே தொற்று நோய்ப் பிரிவின் மருத்துவக் குழுவை, தென் மாகாணத்துக்கு அனுப்புமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் விடுவிக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இந்தக் குழு அங்கு பயணித்தது.
இதேவேளை வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது தென் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

