தென் கொரியாவில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் தங்கள் வீடு நோக்கி சென்றிருந்த நால்வர் தன்னார்வமாக தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
அவர்கள் நேற்று இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த முதலாம் திகதி முதல் 9ஆம் திகதி வரை இலங்கை வந்தவர்கள் இதுவரையில் தனிமைப்படுத்திக் கொள்ளாதர்கள் தன்னார்வமாக முன்வருமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
அவ்வாறு நாட்டிற்கு திரும்பிய நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் 117 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நால்ரும் தன்னாவர்கமாக முன்வந்து தம்மை தனிமைப்படுத்தியுள்ளனர். அத்துடன் எந்தவித சோதனை நடவடிக்கையும் இன்றி தமது வீடுகளுக்கு சென்றுவர்களை உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக மூன்று தினங்களுக்கு அரச பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

