கொரிய தீபகற்பத்தில் நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியா நோக்கி பயணமானார்.
உச்சிமாநாட்டிற்குச் செல்வதற்கு முன்னர் இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் வூஜின் ஜியோங்கை முன்னாள் ஜனாதிபதி சந்தித்தார்.
157 நாடுகள் பங்கேற்கும் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்.
தென்கொரியாவுக்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்புவார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]