தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேகோப் ஸூமா தான் உடனடியாக பதவி விலகுவதாக தொலைக்காட்சி ஒன்றினுாடாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
பதவி விலகாவிட்டால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முகம்கொடுக்க நேரிடும் என ஆளும் ஆபிரிக்க தேசியக் கட்சி அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்தே, இவர் இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
கட்சியின் புதிய தலைவர் சிறில் சமபோசவுக்கு இடமளிக்கும் விதத்தில் பதவி விலக வேண்டும் என ஜேகோப் ஸூமா மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்ததாகவும் அந்நாட்டுத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருக்கும் ஸூமா பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.