Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தென்னக கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரிநாதர் கோவில்

July 6, 2021
in News, ஆன்மீகம்
0

கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளியங்கிரிநாதர் கோவில் அமைந்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலை ஏழு சிகரங்களை கொண்டிருக்கிறது.

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது, வெள்ளியங்கிரி மலை. இது மேகங்கள் சூழ, வெள்ளியால் வார்க்கப்பட்டதுபோல் காட்சியளிப்பதால் ‘வெள்ளியங்கிரி’ என்று அழைக்கப்படுகிறது. இது ஏழு மலைத் தொடர்களைக் கொண்டதாகும். இதன் ஏழாவது மலையில்தான், வெள்ளியங்கிரிநாதர், சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். இது சிவபெருமானின் காலடிபட்ட மலை என்றும், இங்கு சில காலம் ஈசன் தன் மனைவி பார்வதியுடன் தங்கியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் இதனை ‘தென்னக கயிலாயம்’ என்றும் அழைப்பார்கள்.

கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளியங்கிரிநாதர் கோவில் அமைந்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலை ஏழு சிகரங்களை கொண்டிருக்கிறது. சுமார் 6 கிலோமீட்டர் தூரம் செல்லும் இதன் பாதையில், வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதை வனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்கள் இருக்கின்றன.

மலையின் அடிவாரப் பகுதி ‘பூண்டி’ என்று அழைக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் வெள்ளியங்கிரி நாதர், சவுந்திரநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இவர்களுடன் விநாயகர், முருகப்பெருமான் உள்ளிட்ட இன்னும் பிற தெய்வ சிலைகளும் காணப்படுகின்றன. வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது சிகரத்தில் உள்ள ஒரு குகையில் சுயம்பு லிங்க வடிவிலான இறைவனை தரிசனம் செய்யலாம். இதற்காக கடுமையான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஆதிசங்கரர் வழிபட்ட இடமாகவும் இது போற்றப்படுகிறது.

சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும், சூட்சுமத்தில் இயங்கியும் வருவதாகவும் சொல்கிறார்கள்.

வெள்ளியங்கிரி மலை உச்சி வரை செல்ல இயலாதவர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி நாதரை தரிசித்து செல்கின்றனர். வெள்ளியங்கிரி மலை யாத்திரை செல்ல நினைப்போர் பொதுவாக ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மலை ஏறுகின்றனர். அதன் பிறகு கடும் பணி, குளிர் போன்ற காரணத்தால் பலர் பயணத்தை தவிர்பதுண்டு. அதோடு மற்ற காலங்களில் விலங்குகளின் நடமாட்டமும் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இம்மலை சுமார் 3500 அடி உயரம் கொண்டதால் இம்மலை ஏறும் தூரம் என்னவாக இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இம்மலையை ஏறுவது கடினம் என்றாலும் ஆறு சிகரங்களை கடந்து ஏழாவது மலையில் சுயம்பு வடிவில் வீற்றிருக்கு சிவனை தரிசிக்கும் சமயத்தில் துயரங்கள் அனைத்தும் பறந்தோடும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தொடங்கியது- பக்தர்கள் பங்கேற்க தடை

Next Post

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அக்‌ஷய் குமார்

Next Post

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அக்‌ஷய் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures