தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மற்றும் வியாபார முகாமைத்துவ பீடங்களின் ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் நாளை (26) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப்பல்கலையின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இப்பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.