தெனியாய பல்லேகம பிரதான வீதியின் கன்னங்கர மஹா வித்தியாலயத்திற்கு முன்னால் நேற்றையதினம்(15-02-2018) மாலை சம்பவித்த விபத்தில் இளைஞா் ஒருவா் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளாா்.
தெனியாயவில் பல்லேகமவிற்கு கொங்ரீட் கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் ஒன்றுடன் பாடசாலை சந்திற்கு அருகில் உள்ள கராஜ் ஒன்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் தெனியாய நகரத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள் வழுக்கி சென்று டிபர் வண்டியில் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளாா்.இந்த சம்பவத்தின் போது 24 வயதுடைய ஏ.பி.சுரங்க என்பவரே உயிரிழந்துள்ளாா்.
சடலம் தெனியாய வைத்தியசாலையில் மரண பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்கள் இரண்டையும் தெனியாய பொலிஸார் பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.