குற்றவாளிகள் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு, போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபடுவதாயின் தவறு எங்கு இருக்கின்றது என்று அவசரமாக கண்டறிய வேண்டியுள்ளது என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெறும் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச் செயல்கள் என்பவற்றை கட்டுப்படுத்த தூக்குத் தண்டனை அவசியம் என சமூகத்தில் கருத்தொன்று வளர்ந்துள்ளது. நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸாரும், நீதிமன்றமும் சிறைச்சாலையும் ஒழுங்காக செயற்பட வில்லை என்பதே இக்கருத்து உருவாவதற்குக் காரணம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
