கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க மதகுருவான ஆண்ட்ரூ கிரெய்க் ப்ருன்சனை விரைவில் விடுதலை செய்யாது போனால் துருக்கியின் மீது மேலும் பல தடைகளை விதிக்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே துருக்கிக்கு பல தடைகளை விதித்துள்ளது. இதனால், துருக்கியின் பொருளாதாரம் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2 வருட காலமாக துருக்கி பாதுகாப்புப் பிரிவினால், இந்த அமெரிக்க மதகுரு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு துருக்கி ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதி முயற்சியுடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

