Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

துயி­லு­ம் இல்­லங்­க­ளில் ராணு­வத்­தி­னர் நடத்தை பெற்­றோ­ரின் நெஞ்­சில் மிதிப்­ப­தா­க­வே­யுள்­ளது

October 23, 2017
in News, Politics
0
துயி­லு­ம் இல்­லங்­க­ளில் ராணு­வத்­தி­னர் நடத்தை பெற்­றோ­ரின் நெஞ்­சில் மிதிப்­ப­தா­க­வே­யுள்­ளது

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பல துயி­லும் இல்­லங்­க­ளில் தமது பிள்­ளை­க­ளின் கல்­ல­றை­களை உழுது தள்­ளிய இரா­ணு­வம் அதன்­மேல் சப்­பாத்­துக்­கால்­க­ளால் மிதித்து திரி­வது பெற்­ற­வர்­க­ளின் நெஞ்­சில் மிதிப்­பது போன்­றுள்­ளது. இப்­படி அவர்­கள் நடந்­து­கொள்­வ­தால் மாவீ­ரர்­க­ளைப் பெற்­ற­வர்­க­ளின் உள்­ளங்­கள் வதங்கு­கின்­றன என்று பெற்­றோர்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

எனவே இதற்கு மாற்று ஏற்­பாட்டை மேற்­கொண்டு உண்­மை­யான நல்­லி­ணக்­கத்­துக்கு வழி ஏற்­ப­டுத்­துங்­கள்.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வவு­னியா மாவட்­டக் கிளைத் தலை­வ­ரு­மான வைத்­தி­யக் கலா­நிதி ப.சத்­தி­ய­லிங்­கம் அரச தலை­வ­ரி­டம் வேண்­டு­கோள் விடுத்­துள்ளார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
வவு­னியா மாவட்­டத்­தில் இடம்­பெற்ற நட­மா­டும் சேவைக்கு வருகை தந்த அரச தலை­வ­ரு­டன் சுமார் 30 நிமி­டங்­கள் கலந்துரை­யா­டி­னேன்.

அதன்­போது பல கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்­த­ தாக சத்திய­லிங்­கம் தெரி­வித்­தார்.

அதில் துயி­லும் இல்­லம் தொடர்­பான கோரிக்­கை­யும் முன்­வைக்கப்­பட்டது. அதன்­போது,

வடக்கு மாகா­ணத்­திலே விடு­த­லைப் புலி­க­ளின் காலத்­தில் பேணப்­பட்ட பல துயி­லு­மில்­லங்­கள் வெளி­யான பிர­தே­சங்­க­ ளில் உள்­ளன.

மற்­றும் சில படை­யி­ன­ரின் பிடி­யில் உள்­ளன. அவ்­வாறு படை­யி­னர் பிடி­யில் உள்ள துயி­லு­மில்­லங்­க ­ளில் தமது பிள்­ளை­க­ளின் கல்­ல­றை­களை உழுது தள்­ளிய இரா­ணு­வம் அதன்­மேல் சப்­பாத்­துக்­கால்­க­ளால் மிதித்து திரி­வ­த­ னைப் பெற்­ற­வர்­க­ளால் பொறுக்க­மு­டி­ய­வில்லை.

இது இரா­ணு­வத்­தி­னர் தமது நெஞ்­சில் மிதிப்­பது போன்ற உணர்­வையே அனு­ப­வித்து வேத­னைப்­ப­டு­வ­தாக மாவீ­ரர்­க­ளின் பெற்றோர் முறை­யி­டு­கின்­ற­னர்.

இது தொடர்­பில் பல­ரும் எமக்கு முறை­யிட்­ட­வாறு உள்­ள­னர்.

எனவே இதற்கு மாற்று ஏற்­பாடு மேற்­கொள்­ள­வேண்­டும்.

துயி­லு­மில்­லங்­க­ ளைப் பார்த்­துத் தமது நெஞ்­சில் சிறி­த­ள­வே­னும் ஆறு­தல் அடைய வழி ஏற்­ப­டுத்­து­மாறு கோரு­கின்­ற­னர்.

அவ்­வா­றான செயல்­க­ளின் மூலமே உண்­மை­யான நல்­லி­ணக்­கத்­துக்கு வழி ஏற்­பட முடி­யும் என்ற அவர்­க­ளின் கூற்­றுக்கு அரசு செவி­சாய்க்­க­வேண்­டும்.

அர­சைப் பொறுத்­த­வ­ரை­யில் அங்கே விதைக்­கப்­பட்­ட­வர்­கள் புலிகள்.

ஆனால் தமி­ழர்­க­ளைப் பொறுத்த மட்­டில் அவர்­கள்­த­மது பிள்­ளை­கள், உற­வு­கள். அவர்­களை தமி­ழர்­கள் தெய்­வங்­க­ளா­கவே கரு­து­கின்­ற­னர்.

இறந்­த­வர்­கள் எவ­ரா­யி­னும் இறப்­பின் பின்­னர் மரி­யா­தையை வழங்­கு­வதே பன்­னாட்டு விழு­மி­யம்.

அதனை எமது நாட்டு அர­சும் காண்­பிக்க முன்­வர வேண்­டும் – என்று கோரிக்கை விடுத்­தேன்.

குறித்த விட­யம் தொடர்­பில் கோரிக்கை மனு ஒன்றை எழுத்­தில் சமர்ப்­பி­யுங்­கள்.

அவை தொடர்­பில் ஆராய்ந்து உரிய ஏற்­பா­டு­க­ளின் பிர­கா­ரம் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அரச தலை­வர் தெரி­வித்­தார் என்று சத்தியலிங்­கம் தெரி­வித்­தார்.

Previous Post

கலைப் பீடத்துக்கு மேலுமொரு வாரம் பூட்டு

Next Post

அரியாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட – 7 போ் கைது

Next Post
அரியாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட – 7 போ் கைது

அரியாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட - 7 போ் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures