மித்தெனிய லபுஹேன்கொடவில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே நேற்று கைதுசெய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
7 ரவைகளும், 150 கிராம் கேரளக் கஞ்சா தொகையும் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.