அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாயினர்.
கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டாரன்ஸ் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதியில் நேற்று திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது.இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட ஆண்கள் தான் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த ஆண்டில் சுமார் 40,000 பேர்
துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளனர்.