இலங்கையில் தனிநபர் மற்றும் நிறுவன துப்பாக்கி அனுமதி வைத்திருப்பவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான உரிமங்களை அக்டோபர் 01 முதல் டிசம்பர் 31 வரை புதுப்பிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அனுமதி பெறாமல் துப்பாக்கிகள் வைத்திருத்தல் சட்டத்துக்கு புறம்பானதாகும் ஆகவே துப்பாக்கிகள் வைத்திருக்க அனுமதி உள்ளவர்கள் அதற்கான அனுமதியை அக்டொபர் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் 31ஆம் திகதிக்குள் புதுப்பிக்க கால வரையறை வழங்கப்பட்டுள்ளது.

