மாத்தறை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடிப்பதற்கு வந்த நபர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் ஒருவர் உயிரிழந்தார் இருவர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் ஒருவர் கொள்ளையா் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கொள்ளையர்கள் பயன்படுத்திய இரு உந்துருளிகள் மற்றும் துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.பொலிஸ் அவசர அழைப்புக்கு வழங்கப்பட்டுள்ள தகவலுக்கமைய , சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள வேளையே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

