கொழும்பு செட்டியார்தெருவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவர் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 7.45 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.