கண்டி – அசலக்க, வெல்கஹவாடிய பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பட்டுமுல்ல மற்றும் அசலக்க பிரதேசங்களைச் சேர்ந்த 37, 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மஹியங்கனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அசலக்க பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]