ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தேடும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவவில்லை என்றும் டிரம்ப் கூறினார். கடந்த 15 ஆண்டில் பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர் கொடுத்து அமெரிக்கா உதவியது முட்டாள்தனம் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு கைமாறாக பாகிஸ்தான் பொய், வஞ்சகத்தைத் தான் திருப்பித் தந்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சொர்க்க பூமியாக இருந்துள்ளது.
எங்கள் நாட்டு தலைவர்களைப் பார்த்தால் முட்டாள்கள் போலத் தெரிகிறதா பாகிஸ்தான் நாட்டிற்கு இனியும் எங்களின் நிதியுதவி கிடைக்காது\’ என்று ட்ரம்ப் டுவீட்டியுள்ளார்.பாக். – அமெரிக்கா உறவில் விரிசல் அமெரிக்கா பாகிஸ்தான் இடையேயான உறவு சுமூகமான முறையிலேயே இதுவரை இருந்து வந்தது.
ஆனால் ட்ரம்பின் காட்டமான டுவீட்டிற்கு பிறகு பாகிஸ்தானிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒத்துழைக்காத பாகிஸ்தான் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு அளிக்கும் 255 டாலர் மில்லியன் உதவியை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்தது.
ஏனெனில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் போதுமான ஒத்துழைப்பு அளிக்காததன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. ஏன் உதவிகள் நிறுத்தம் இந்நிலையில் தான் ட்ரம்ப் இனி எந்த உதவிகளையும் செய்ய வேண்டாம் என்ற அதிரடி டுவீட்டை போட்டுள்ளார்.