Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தீவிரவாதிகளின் புகலிடம் கனடா : இந்திய வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு

November 6, 2024
in News, World, இந்தியா, முக்கிய செய்திகள்
0
இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

ஜஸ்டின் ட்ரூடோ (justin trudeau)தலைமையிலான கனடா(canada) அரசு, தீவிரவாதிகளுக்கு அரசியல் புகலிடம் அளித்துள்ளதாக இந்திய(india) வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்(jaishakar),வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.

கனடாவின் பிராம்டனில் இந்து கோயில் தாக்கப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவித்த நிலையிலேயே அவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்ட மூன்று விடயங்கள்

நான்கு நாட்கள் (நவ.3 -7) அரசுமுறை பயணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அங்குள்ள கான்பெர்ரா நகரில் அந்நாட்டு வெளியுறுவுத் துறை அமைச்சர் பென்னி வோங் உடன் கூட்டாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியது:

தீவிரவாதிகளின் புகலிடம் கனடா : இந்திய வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு | Canada For Giving Political Space To Extremists

“நான் மூன்று விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று, குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதையும் வழங்காமல் குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைக்கும் முறையை கனடா வளர்த்துக் கொண்டுள்ளது.

தூதுவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்

இரண்டாவதாக, கனடாவை பார்க்கும்போது, எங்களைப் பொறுத்தவரை எங்கள் நாட்டு தூதுவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தீவிரவாதிகளின் புகலிடம் கனடா : இந்திய வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு | Canada For Giving Political Space To Extremists

மூன்றாவது சம்பவம், அந்த நபர் பேசியதைப் பற்றியது. அந்த காணொளியை பாருங்கள். தீவிரவாத சக்திகளுக்கு அங்கு (கனடாவில்) அளிக்கப்படும் அரசியல் இடத்தை அது ஓரளவு வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  

Previous Post

கேப்பாபுலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமரிடம் மகஜர் கையளிப்பு

Next Post

சந்திரிக்காவை கொலை செய்ய சதி: பாதுகாப்பு அமைச்சுக்கு பறந்த கடிதம்

Next Post
இடைக்கால அரசின் பிரதமர் அமைச்சரவைக்கும் அரசாங்கத்திற்கும் தலைமை வகிக்க கூடியவராக இருக்க வேண்டும் | சந்திரிகா

சந்திரிக்காவை கொலை செய்ய சதி: பாதுகாப்பு அமைச்சுக்கு பறந்த கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures