தமது கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு வழங்கத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் தினங்களில் அரசுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் எச்.கே.காரியவசம் இது குறித்து தெரிவிக்கையில்;
தமது சங்கத்தினால் இதற்கு முன்னர் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பினை பிரதமரின் செயலாளர் வழங்கிய உறுதிமொழிகளின் பிற்பாடு கைவிடப்பட்டதாகவும் எவ்வாறாயினும், குறித்த உறுதிமொழிகள் இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.