Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தீர்வு, பொறுப்­புக்­கூ­றல், அபி­வி­ருத்­தி­யில் அரசு மந்தம்- மனோ !!

March 31, 2018
in News, Politics, World
0

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு புதிய அர­ச­மைப்­பின் மூலம் தீர்வு, சட்­டத்­தின் முன் அனை­வ­ரும் சமம் என்ற அடிப்­ப­டை­யில் பொறுப்­புக்­கூ­றல், நாடு, நகர, கிராம அபி­வி­ருத்தி ஆகிய மூன்று துறை­க­ளி­லும் இது­வ­ரை­யில் அரைக்­கி­ணற்­றைக்­கூட எமது அரசு தாண்­ட­வில்லை என்­பது அப்­பட்­ட­மான உண்மை.

இவ்­வாறு தெரி­வித்­தார் அமைச்­சர் மனோ கணே­சன். கொழும்­பில் நடந்த கம்­பன் விழா­வில் உரை­யாற்­றும்­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார் என்று அவ­ரது ஊட­கக் குறிப்பு தெரி­வித்­தது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

இலங்கை தலைமை அமைச்­சர் தொடர்­பில், தீர்­மா­னக்­க­ர­மான நம்­பிக்கை வாக்­க­ளிப்பு நான்­காம் திகதி இலங்கை நாடா­ளு­மன்­றத்­தில் நடை­பெ­றப் போகி­றது. இலங்கை வேந்­தன் இரா­வ­ணனை அவ­னது சகோ­த­ரன் கும்­ப­கர்­ணன் கைவிட வில்லை. ஆனால், இன்­னொரு சகோ­த­ரன் விபீ­ட­னன் கைவிட்­டான். இதில் நாம் என்ன செய்­வது? கும்­ப­கர்­ண­னையா, விபீ­ட­ன­னையா, வழி­காட்­டி­யா­கக் கொள்­வது என நாட்­டின் வடக்­கி­லும், தெற்­கி­லும் நம்­ம­வர் சில­ருக்கு இங்கே குழப்­பம். நம்­மில் சிலர் அள­வுக்கு அதி­க­மா­கப் புல்­ல­ரித்­துப் போய், திடுக்­கிட்­டுப் போய், இவர்­க­ளில் ஒரு சாராரை இரா­மர்­க­ளா­க­வும், அடுத்த சாராரை இரா­வ­ணர்­க­ளா­க­வும் கரு­திக்­கொண்டு தடு­மா­று­கி­றார்­கள்.

எனக்கு ஒரு குழப்­ப­மும் கிடை­யாது. ஏனென்­றால் இங்கே இரா­ம­னும் இல்லை. இரா­வ­ண­னும் இல்லை. என் மன­சாட்­சிப்­படி என் சமு­தா­யம் ­தான் எனக்கு முக்­கி­யம். இரு தரப்­பும் அசு­ரர்­கள்­தான். ஓர் அசு­ரனை அனுப்­பி­னால் வந்து அம­ரப்­போ­வ­தும் இன்­னொரு அசு­ரன்­தான். ஆகவே இரண்டு அசு­ரர்­க­ளில் எந்த அசு­ரன், அசு­ரத்­த­னம் குறைந்­த­வன் என்று கூட்­டிக்­க­ழித்துத் தேட வேண்­டி­ய­தும், அர­சி­யல் தீர்வு, பொறுப்­புக்­கூ­றல், அபி­வி­ருத்தி ஆகிய இலக்­கு­களை அடைய புதிய வழி­களைத் தேடு­வ­தும்­தான் எங்­கள் நோக்­கம்.

புதிய வழி­களைத் தேட வேண்­டும் என்று நான் கூறி­னேன். ஏன் அப்­படி கூறி­னேன்? நாம் கையாண்ட பழைய வழி­க­ளில் பல பயன் தர­வில்லை. சில அரை­கு­றைப் பயன்­களைத் தந்­துள்­ளன. சில பிச்சை வேண்­டாம், நாயை பிடி என இருந்த இருப்­புக்­கும் வேட்டு வைத்து விட்­டன.

தமி­ழ­ரசு தந்தை செல்வா சத்­தி­யாக்­கி­ரக வழி­யைத் தேடி, பின் உள்­ளூ­ரில் ஒப்­பந்­தங்­க­ளைச் செய்து தீர்­வைத் தேடும் வழியை முன்­னெ­டுத்­தார். அந்த வழிக்குப் பெரி­ய­வர் சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மான், மாம­னி­தர் அஷ்­ரப் ஆகி­யோ­ரும் ஒவ்­வொரு கால­கட்­டத்­தில் வலுச் சேர்த்­த­னர். பின் கூட்­டணித் தலை­வர் அண்­ணன் அமிர்­த­லிங்­கம் பார­தத்­தின் துணை­யு­டன் தீர்வு தேடும் வழியை நாடி­னார். அதை­ய­டுத்து விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வர் ஆயு­தப் போராட்ட வழியை முன்­வைத்­துப் போரா­டி­னார்.

இன்று கூட்­ட­மைப்­புத் தலை­வர் சம்­பந்­தன், உலக சமூ­கத்தை துணைக்கு கொண்டு, ஐ.நா. சபை மூலம் தீர்வு தேடும் வழியை முன்­வைத்து அவ­ரால் இயன்­ற­தைச் செய்து வரு­கி­றார். இதன்­போது தமிழ் முற்­போக்­குக் கூட்­டணித் தலை­வர் என்ற முறை­யில் நான், சகோ­தர இனங்­க­ளுக்கு எமது இன்­னல்­களை, அபி­லா­ஷை­களை எடுத்து கூறி தீர்வு தேடும் சக­வாழ்வு வழியை முன்­வைத்து என்­னால் இயன்­றதைச் செய்து வரு­கி­றேன். இந்த அனைத்து வழி­க­ளும் தீர்­வைக் கொண்டு வரா­விட்­டால், கட­வுள் விட்ட வழி­தான்.

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு புதிய அர சமைப்பின் மூலம் அர­சி­யல் தீர்வு தேடும் பணி இன்று பாதி­யில் நிற்­கி­றது. இது­வ­ரை­யிலே எமக்கு கிடைத்திருப்­பது, இடைக்­கால அறிக்கை என்ற ஓர் ஆவ­ணம் மட்­டுமே. இதற்கு முன் எங்­கள் முன்­னோர் எழுதி வைத்த ஆவ­ணங்­க­ளு­டன் இதை­யும் அடுக்கி வைக்கப் போகி­றோமா என நாம் தீர்­மா­னிக்க வேண்­டும்.

சட்­டத்­தின் முன் அனை­வ­ரும் சமம் என்ற அடிப்­ப­டை­யில் பொறுப்­புக்­கூ­றல், என்­பது சீர்­கெட்டுப் போய் இன்று அம்­பாறை, கண்டி வரைக்­கும் வந்து விட்­டது. படைத்­த­ரப்பு, மத சீரு­டை­கள் அணிந்து இருந்­தால், சிங்­கள பெளத்­தர் எதை­யும் செய்­து­விட்டு தப்பி விட­லாம் என்ற நிலைமை உரு­வாகி விட்­டது. மறு­பு­றத்­தில் தமிழ் அர­சி­யல் கைதி­கள் முழு­மை­யாக விடு­விக்­கப்­பட வில்லை.

ஆக­வே­தான் இரண்டு அசு­ரர்­க­ளில் எந்த அசு­ரன், அசு­ரத்­த­னம் குறைந்­த­வன் என்று கூட்­டிக்­க­ழித்துத் தேடி, அர­சி­யல் தீர்வு, பொறுப்­புக்­கூ­றல், அபி­வி­ருத்தி ஆகிய இலக்­கு­களை அடைய புதிய வழி­களைத் தேடு­வது எனது நோக்­கம் ஆகி­யுள்­ளது. அந்த வழியை எங்­கள் அர­சுக்கு உள்­ளேயே தேடும் நோக்­கில் நாம் இரு­கின்­றோம். பழைய ஆட்­சி­யரை கொண்டு வந்து சிம்­மா­ச­னத்­தில் அம­ரச் செய்ய விரும்­ப­வில்லை.- என்றுள்ளது.

Previous Post

கன்னியாகுமரி கடற்கரையில் கூட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் கைது!

Next Post

ரணிலுக்கு எதிரான பிரேரணையில் மைத்திரியும் கையொப்பம்!

Next Post

ரணிலுக்கு எதிரான பிரேரணையில் மைத்திரியும் கையொப்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures