மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாகவும் தேர்தல் பெறுபேறுகளைக் கருத்தில் கொண்டும் அரசியல் நிலைமை குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த தீர்மானத்துக்கு வர முன்னர் பிரதமருக்கே, சகல விடயங்களையும் கருத்தில் கொண்டு தீர்மானம் ஒன்றை எடுக்குமாறும் ஜனாதிபதி பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம, செயலாளர் கபீர் ஹாஷிம், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.