இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால அந்தப் பதவியிலிருந்து உடன் விலக வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேனசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அவர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
இலங்கை கிரிக்கெட்டானது சூதாட்டத்தில் செல்வதாக அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுண ரணதுங்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
குறித்த இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் தாம் கோரியதாகவும், எனினும், அரசாங்கம் பதிலளிக்கவில்லை எனவும் ஷெஹான் சேனசிங்க கூறியுள்ளார்.