பஞ்சாப் மாநிலத்தில், அறுவடைக்கு பின் வேளாண் கழிவுகளை விவசாயிகள் திறந்தவெளியில் தீயிட்டு எரித்து வருவதால், ராஜ்புரா பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
காற்று மாசுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பயிர் கழிவு எரிப்பு நிகழ்வு கருதப்படுகிறது. வடமாநிலங்களில் நெல், கோதுமை போன்றவற்றை அறுவடை செய்த பின், வயலில் தேங்கக்கூடிய காய்ந்த விவசாய கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.
இதனால் டெல்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் வான் பரப்பிலும் கரும்புகை படிந்து, காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.
இந்தநிலையில், இன்று ராஜ்புரா பகுதியில் உள்ள உக்சி ஜட்டன் கிராமத்தில், விவசாயிகள் பல ஹெக்டேர் வயல் நிலத்திலிருந்த விவசாய கழிவுகளை தீயிட்டு கொளுத்தினர். இதனால் வானம் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

