அண்மையில் கனடாவுக்கு வந்த நீயாய நானா புகழ் கோபிநாத் அவர்களுடன் திரைக்குப் பின்னால் அதாவது மேடைக்குப் பின்னால் கிடைத்த சந்திப்பும் கௌரவமும் இது. பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு நிகழ்வில் அதற்காக கூடி நின்று உழைத்தவர்களை வெட்டி ஒதுக்காமல், அவர்களை அணைத்து அவர்களுக்கான கௌரவத்தை கொடுத்து நிற்பதே பெருந்தன்மையும் அறமுமாகும்.
ஒன்றாகப் பயணித்தலும் வெளிப்படையாக ஒற்றுமை கொள்ளுதலும் கூட்டுப் பயணமும்தான் தமிழர்களுக்கு அரசியலிலும் வாழ்வியலிலும் கலையிலும் ஊடகத்திலும் இன்று அவசிய தேவையாக உள்ளது.
இந்த நிகழ்வு இடைநடுவில் தளும்பியதும் நிகழ்வுக்கு வந்த மக்கள் மனம் சுழித்ததும் எமக்கு சில செய்திகளை சொல்வதுடன் பல பாடங்களையும் கற்றுத் தருகிறது. அவசியம் கற்றுக்கொள்வோமாக.
அதேநேரம் எமது மக்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் தம் சுயமரியாதைக்கு இழிவற்ற வகையிலும் உழைப்பால் உயர்ந்த அவர்களின் உயர்வுக்கு கீறலற்ற வகையிலும் நடாத்தப்பட வேண்டும் என்பதை என் மனம் அங்கலாய்த்தது.
கனடா தேசத்திற்கு இந்திய பிரபலங்களை அழைக்கும் நாம் எமது தனித்துவமான அடையாளங்களையும் கௌரவத்தையும் இழந்துவிடால் கலையையும் கலைஞர்களையும் ரசிப்பதுதான் சரியாக அமையும் என்பது என் பணிவான எண்ணமும் அவாவும் ஆகும்.
–கிருபா பிள்ளை