கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை மாவட்ட அரசியல்வாதி ஒருவரின் 31 வயதான மூத்த மகன் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் திருகோணமலை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேகநபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து ஹஸிஸ் என்றழைக்கப்படும் போதைப்பொருள் ஒரு கிரேம் 170 மில்லி கிராம் மற்றும் ஹெரோயின் 150 மில்லி கிராம் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை போதைப்பொருளுடன் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]