திருகோணமலை மனையாவெளி பிரதேச மீனவர்களின் வலையில் நேற்று(12) இரவு சுமார் 600 கிலோவுக்கும் அதிகமான ஆணை திருக்கை பிடிபட்டதாக மனையாவெளி பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.
கடல் சீற்றம் காரணமாக சமீபகாலமாக மீன் பிடித்தொழிலில் கடுமையான சரிவை எதிர்கொண்ட நிலையிலே இந்த ஆணை திருக்கை மீன் பிடிபட்டுள்ளது.
குறித்த மீனின் பெறுமதி கணிக்கப்பட்டு விற்பனை செய்வதற்கு மீனின் உரிமையாளர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது
மேலும் ஆணை திருக்கை மீன் மேற்படி பிரதேச கடலில் பிடிபடுவது அபூர்வமானதாக குறித்த பிரதேசத்தில் உள்ள வயதான மீனவர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]