முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரியப் போகிறார்கள் என்று வெகுநாட்களாகவே செய்திகள் உலவுகிறது. இதுகுறித்து இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.
தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக நட்பாக பழகி வருகிறோம். இந்த நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது.
தற்போது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் முடிவுக்கு ரசிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மதிப்பு கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]