திருப்பதி ஆலயத்திற்கு செல்லும் வனப்பகுதியில் பாரிய காட்டு தீ ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக நீடித்த காட்டுத் தீயை பெரும் போராட்டத்தின் மத்தியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக, இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த வனத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கடும் வறட்சி காரணமாக, காட்டு மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசியதனால் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நீடித்த தீயில் பெறுமதி வாய்ந்த மரங்கள் மற்றும் மூலிகைகள் கருகி நாசமாகியுள்ளன.
அத்துடன் இப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாகவும், எனினும் முன் ஆயத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆலயத்திற்கு செல்லும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனினும் குறித்த பகுதி பக்தர்கள் சென்றுவரும் பாதையென்பதனால் இனிவரும் நாட்களில் தீ விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.