திருச்சியில் மே 8-ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயக் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விவசாயிகளை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் மே 8-ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.