திருகோணமலை – தம்பலகாமம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் பலியாகினர்.
உந்துருளி ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உந்துருளி, பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையே, இந்த விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள், 24 மற்றும் 25 வயதுடைய வெள்ளைமணல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.