திருகோணமலை கடலுக்கு அடியில் இருந்து பழைய, அழகிய சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
திருகோணமலை , திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் இராவணன் வெட்டுக்கு அருகே கடல் மட்டத்தில் இருந்து 80 அடிக்கு கீழே குறித்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
திருகோணமலை பிரதேசமானது புராதன காலத்திலிருந்து தமிழர்களின் தலைநகரமாகவும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை அதிகளவில் உள்ளடக்கிய நகராகவும் பார்க்கப்படுகின்றது.
இது, தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழர் தாயகத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டு, சிறப்புடன் திகழ்ந்தது.
இந்நிலையில், திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு அருகே தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவை குறித்த ஆலயத்தினுடைய சிலைகளா அல்லது, ஆலய கட்டுமானத்தின்போது நீரினுள் புதையுண்டு போனவையா என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.