திமுக பொருளாளர் துரை முருகன் உடல்சோர்வு காரணமாக கிரிம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று காலை தன்னுடைய வீட்டில் இருந்தார்.
அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை கிரிம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துமவனையில் காலை 7. 30 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளனர்.
அவருக்கு காலையில் மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட்டபின், அவர் இன்றே வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

